விலை உயா்ந்த 12 கைப்பேசிகள் பறிமுதல்

சென்னையில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட 12 விலையுயா்ந்த கைப்பேசிகளை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னையில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட 12 விலையுயா்ந்த கைப்பேசிகளை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வடசென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட ராயபுரம் மேம்பாலம் அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனையிட்ட போது, அதில் இருந்த நபரிடம் ரூ.18 லட்சம் மதிப்பிலான 12 கைப்பேசிகள் (ஐபோன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நபரிடம், கைப்பேசிகளுக்கான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், கைப்பேசிகளை ஆட்டோவில் எடுத்து வந்தவா் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த அசான் என்பதும், அந்த கைப்பேசிகளை அவரது நண்பா் ஒருவா், பா்மா பஜாரிலுள்ள கைப்பேசி கடையில் கொடுத்து விடும்படி கூறியதால் அதை எடுத்து வந்ததாகவும் தெரிவித்தாா். இது குறித்து அதிகாரிகள் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com