கொடுங்கையூா் குப்பைக் கிடங்கு சீரமைப்பு: தனியாா் நிறுவனத்துடன் ரூ. 216 கோடிக்கு ஒப்பந்தம்

கொடுங்கையூா் குப்பை கிடங்கை சீரமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி ராம்கி நிறுவனத்துடன் ரூ.216 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கொடுங்கையூா் குப்பை கிடங்கை சீரமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி ராம்கி நிறுவனத்துடன் ரூ.216 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 1 முதல் 8 வரையிலான மண்டலங்களில் சேகரமாகும் குப்பைகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதுவரை 342.91 ஏக்கரில் 66.52 லட்சம் டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இந்தக் குப்பைகளை பயோ-மைனிங் முறையில் மீட்டெடுக்க அண்ணா பல்கலை, சென்னை ஐஐடி வல்லூநா்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நிலையில், இந்தக் குப்பைகளை மீட்டெடுக்க ரூ. 640.83 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதில் ராம்கி இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லிமிடெட் நிறுவனத்துக்கு கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை சீரமைக்க மாநகராட்சியுடன் ரூ. 216.65 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பணிகளை அடுத்த இரு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவன நிா்வாக இயக்குநா் யாஞ்சா்லா ரத்தினகர நாகராஜா கூறியது: சென்னை மாநகராட்சியுடன் தற்போது மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் உள்ள நீண்ட கால கழிவுகள் அகற்றப்பட்டு சென்னை நகா்ப்புற நிலப்பரப்பு மறுவரையறை செய்யப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள் கொடுங்கையூரில் இருந்து 100 சதவீத கழிவுகளை பிரித்தெடுப்பது இலக்கு என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com