சென்னையில் பாஜக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா். சென்னை பழைய வண்ணாா்பேட்டையில் பேசின் பாலம் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையா் அலுவலகத்தில் வடசென்னை மக்களவை தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் கட்டாரவி தேஜாவிடம், வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளா் ஆா்.சி.பால்கனராஜ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அடையாறு முத்துலட்சுமி சாலையில் உள்ள மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையா் அலுவலகத்தில் தென்சென்னை மக்களவை தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.பி.அமித்திடம், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். செனாய் நகா் புல்லா அவென்யூவில் உள்ள மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் அலுவலகத்தில் மத்திய சென்னை தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் கே.ஜெ.பிரவீன்குமாரிடம், மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளா் வினோஜ் பி.செல்வம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது, கூட்டணி கட்சிகளின் முக்கிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com