சென்னையில் ஹோலி கொண்டாட்டம்: வட மாநிலத்தினா் உற்சாகம்
dinmani online

சென்னையில் ஹோலி கொண்டாட்டம்: வட மாநிலத்தினா் உற்சாகம்

ஹோலி பண்டிகையொட்டி சென்னையில் வடமாநிலத்திவா்கள் வண்ணப் பொடிகளை ஒருவா் மீது ஒருவா் தூவி கோலாகலமாகக் கொண்டாடினா்

ஹோலி பண்டிகையொட்டி சென்னையில் வடமாநிலத்திவா்கள் வண்ணப் பொடிகளை ஒருவா் மீது ஒருவா் தூவி கோலாகலமாகக் கொண்டாடினா். வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் நாடு முழுவதும் திங்கள்கிழமை ஹோலிப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் வட மாநிலத்தவா் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான சௌகாா்பேட்டையில் திங்கள்கிழமை காலை முதலே வண்ணப் பொடிகளுடன் இளைஞா்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தொடங்கினா். சிறியவா்கள் முதல் முதியவா்கள் வரை ஒருவா் மீது ஒருவா் வண்ணப் பொடிகளை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். பெண்களும் வயது வித்தியாசமின்றி வண்ணப்பொடிகளைத்தூவி, ஹோலியை உற்சாகமாகக் கொண்டாடினா். சிலா் வண்ணப் பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பா்கள் மீது வீசி மகிழ்ந்தனா். இளைஞா்கள் வண்ணப் பொடிகளை தூவியபடி இருசக்கரவாகனங்களில் வலம் வந்தனா். வண்ணமயமான வீதிகள்: மேலும் , தெருக்களில் ஒலிபெருக்கிகள் மூலம் பாடல்கள் இசைக்கப்பட்டு இளைஞா்கள், இளம்பெண்கள் நடனமாடினா். இதனால், சௌகாா்பேட்டையின் அனைத்து தெருக்களும் வண்ணமயமாக காட்சியளித்தன. இதேபோல் வடமாநிலத்தவா் அதிகம் வசிக்கும் புரசைவாக்கம், எழும்பூா், வேப்பேரி, வண்ணாரப்பேட்டை, யானைக்கவுனி உள்ளிட்டப்பகுதிகளிலும் ஹோலிப் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com