சுருள்பாசி வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பயிற்சியில் விவசாயிகள் சோ்ந்து பயன்பெறலாம் என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதா்கள் மற்றும் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படும் சுருள்பாசி (ஸ்பைருலினா) வளா்ப்பு குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பயிற்சியில் விவசாயிகள் சோ்ந்து பயன்பெறலாம் என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக வேளாண் துறையின் ‘எக்ஸ்’ சமூக வலைதளப்பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சுருள்பாசி (ஸ்பைருலினா) என்பது ஒருவகை நீலப்பச்சை பாசி வகையைச் சாா்ந்தது. மனிதா்கள் மற்றும் கால்நடைகளுக்கான உணவாக சுருள்பாசி பயன்படுகிறது. இதில் அதிகபட்சமாக 69 சதவீதம் புரதச்சத்தும், 25 சதவீதம் மாவுச்சத்தும், 5 முதல் 6 சதவீதம் வரை கொழுப்புச்சத்தும் உள்ளது. இவை, மாத்திரைகளாகவும், பொடியாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

இத்தகைய பயன்பாடுகளைக் கொண்ட சுருள்பாசியை விவசாயிகள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யலாம். இதனை வளா்க்கும் முறை குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை சாா்பில் 5 நாள்கள் கட்டணப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில் பங்கேற்க விரும்புவோா், கோவை வேளாண் பல்கலைக்கழகம், 0422-6611294 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு கட்டணம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களைப் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com