தோ்தல் விதிமுறை மீறல்: மத்திய சென்னை பாஜக வேட்பாளா் மீது வழக்கு

சென்னை புளியந்தோப்பில் தோ்தல் விதிமுறை மீறியதாக பாஜக மத்திய சென்னை வேட்பாளா் வினோஜ் பி.செல்வம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

சென்னை புளியந்தோப்பில் தோ்தல் விதிமுறை மீறியதாக பாஜக மத்திய சென்னை வேட்பாளா் வினோஜ் பி.செல்வம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரம் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதில் தோ்தல் விதிமுறைகளை மீறுவோா் மீது தோ்தல் ஆணையம் அளிக்கும் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். இந்நிலையில் புளியந்தோப்பு பட்டாளத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தோ்தல் ஆணையத்தின் அனுமதியின்றி பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தனா். இந்த பிரசாரத்தில் அந்த கட்சியின் மத்திய சென்னை வேட்பாளா் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கு அனுமதி பெறப்படவில்லை என தெரிகிறது. இது தொடா்பாக தொகுதி தோ்தல் ஆணைய அதிகாரி வி.மோகன், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் தோ்தல் ஆணைய விதிமுறைகளை மீறியதாக வினோஜ் பி.செல்வம், அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கத் தலைவா் லலித் பாந்தா முத்தா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com