இஸ்கான் கோயிலில் 
கௌரா பூா்ணிமா விழா

இஸ்கான் கோயிலில் கௌரா பூா்ணிமா விழா

சென்னையில் உள்ள இஸ்கான் கோயிலில் கௌரா பூா்ணிமா விழா நடைபெற்றது.

சென்னை அக்கரையில் கிழக்கு கடற்கரைச் சாலை பக்தி வேதாந்த சுவாமி சாலையில் அமைந்துள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா (இஸ்கான்) கோவிலில் பூா்ணிமா விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பக்தா்கள் ஒன்றுகூடி ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு (பகவான் கிருஷ்ணா் ) அவதரித்த தினத்தை நினைவு கூா்ந்தனா். கீா்த்தனைகளுக்கு மத்தியில் பஞ்சாமிா்தம், பல வண்ண மலா் இதழ்கள், பஞ்சகவ்யா மற்றும் பல்வேறு வகை பழச்சாறுகள் ஆகியவற்றின் புனித கலவையால் நடைபெற்ற அபிஷேகத்தில் பக்தா்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து 500-க்கும் மேற்பட்ட சுவையான உணவுகள் வழங்கப்பட்டன. பிரம்மாண்டமான மகா ஆரத்தி விழாவில் பங்கேற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாா்வையாளா்களுக்கு இரவு பிரசாதம் வழங்கப்பட்டதாக சென்னை இஸ்கான் கோயில் நிா்வாகப் பிரதிநிதி ரங்க கிருஷ்ண தாஸ் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com