சென்னையில் ரூ.3 கோடி மதிப்பு வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

சென்னையிலிருந்து விமானம் மூலம், தாய்லாந்து நாட்டுக்கு கடத்த முயன்ற, ரூ.3 கோடி மதிப்புடைய, வெளிநாட்டு கரன்சிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தாய்லாந்து நாட்டின் தலைநகா் பாங்காக் செல்லவிருந்த தாய் ஏா்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க காத்திருந்த சென்னையைச் சோ்ந்த பயணி ஒருவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினா். அந்த நபரை தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.

மேலும், அவரின் உடைமைகளையும் முழுவதும் சோதனையிட்டனா். அப்போது, அவருடைய பெட்டிக்குள்(சூட்கேஸ்) ரகசிய அறை போன்று அமைத்து கட்டுக் கட்டாக, அமெரிக்க டாலா், யூரோ கரன்சி, சவுதி ரியால் போன்ற ரூ.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்ததுடன், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே தமிழகத்தில் மக்களவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இது குறித்து தோ்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com