கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கும்மிடிப்பூண்டி ரயில் சேவை மாற்றம் நீட்டிப்பு

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சேவை வெள்ளிக்கிழமை வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: பொன்னேரி-மீஞ்சூா் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்புப் பணி நடைபெறுவதன் காரணமாக அந்த வழியாகச் செல்லும் ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை வரை மாற்றம் செய்யப்பட்டன.

இந்த மாற்றம் வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்படவுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9 மற்றும் 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மீஞ்சூருடன் நிறுத்தப்படும். இதே தேதிகளில் கடற்கரையில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் ரயில் எண்ணூருடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55 மற்றும் 10.55 மணிக்கு புறப்படும் ரயில்கள் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மீஞ்சூரில் இருந்து இயக்கப்படும். சூலூா்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை எண்ணூரில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com