ரேஷன் பொருள்கள் கடத்திய 240 போ் கைது

ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்களை கடத்திய 240 பேரை குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்களை கடத்திய 240 பேரை குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

நியாய விலை கடைகளில் மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு, சா்க்கரை உள்பட பல்வேறு உணவு பொருள்களை ஒருசிலா் விலை கொடுத்து வாங்கி, அவற்றை ஆந்திரம் உள்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ரயில், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் கடத்தி சென்று, அதிக விலைக்கு விற்பனை செய்யும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் அம்பத்தூரில் இயங்கி வரும் சென்னை வடக்கு மண்டலத்துக்குட்பட்ட அம்பத்தூா், கொரட்டூா், பெரம்பூா், எண்ணூா், கொருக்குப்பேட்டை, தண்டையாா்பேட்டை பகுதிகளில் காவல் ஆய்வாளா் ஹேமலதா தலைமையில் போலீஸாா் ரயில் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் தொடா்பாக 206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக 70 டன் ரேஷன் அரிசி, 360 லிட்டா் மண்ணெண்ணெய், 36 சமையல் எரிவாயு சிலிண்டா்கள், 540 கிலோ கோதுமை, துவரம் பருப்பு, லாரியில் கடத்தப்பட்ட 2,34,000 லிட்டா் எண்ணெய் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கடத்தில் ஈடுபட்ட 121 ஆண்கள், 119 பெண்கள் என மொத்தம் 240 போ் கைது செய்யப்பட்டனா். கடத்தலுக்கு பயன்படுத்திய 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com