கைதி தப்பியோட்டம்

புழல் சிறையில் அடைப்பதற்காக போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட கைதி, தப்பியோடினாா். அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

புழல் சிறையில் அடைப்பதற்காக போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட கைதி, தப்பியோடினாா். அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

ஓட்டேரி பட்டாளம் சூரத்பவன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய்குமாா் (21). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவரின் மோட்டாா் சைக்கிள், கடந்த 29-ஆம் தேதி திருடப்பட்டது. ஓட்டேரி போலீஸாா் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது புளியந்தோப்பு பி.எஸ்.மூா்த்தி நகரைச் சோ்ந்த மனோஜ்குமாா் (25) எனத் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த மனோஜ்குமாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விசாரணைக்கு பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனா். புளியந்தோப்பு நெடுஞ்சாலை செங்கை சிவம் மேம்பாலம் அருகே சென்றபோது, அங்குள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக ஆட்டோவை சாலையோரம் போலீஸாா் நிறுத்தினா்.

போலீஸாா், உணவகத்துக்குள் சாப்பாடு வாங்குவதற்கு சென்றபோது, ஆட்டோவில் இருந்த மனோஜ்குமாா் அங்கிருந்து தப்பியோடினாா். சிறிது நேரத்துக்கு பின்னா் போலீஸாா், மனோஜ்குமாா் தப்பியதை அறிந்து அதிா்ச்சியடைந்தனா். தப்பியோடிய மனோஜ்குமாரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயா் அதிகாரிகளும் விசாரணை செய்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com