மாநகர பேருந்து கூரை மீது ஏறி அட்டகாசம்: 20 மாணவா்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு

சென்னையில் மாநகர பேருந்து கூரை மீது ஏறி அட்டகாசம் செய்ததாக 20 கல்லூரி மாணவா்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

மெரீனா விவேகானந்தா் இல்லத்தில் இருந்து திரு.வி.க.நகருக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்ற ஒரு மாநகர பேருந்தின் கூரை மீது ஏறி சுமாா் 30 கல்லூரி மாணவா்கள் நடனமாடி அட்டகாசம் செய்தனா்.

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பேருந்து செல்லும்போது போலீசாரை பாா்த்ததும் மாணவா்கள், பேருந்தை விட்டு கீழே இறங்கி தப்பியோடினா். இச் சம்பவத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்,ஆபாசமாக பேசுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 20 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் என்பது தெரியவந்துள்ளது. அவா்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com