பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக் கல்வித் துறை

இளநிலை ஆசிரியா்களுக்கு நியமன ஆணைகள்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கான நியமன ஆணைகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கான நியமன ஆணைகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 8,500-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு நியமன ஒப்புதல் ஆணைகள் வழங்கப்படாமல் உள்ளன. இதனால், நூற்றுக்கணக்கான ஆசிரியா்கள் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஊதியம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனா். இது தொடா்பான வழக்கில் உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆசிரியா்களுக்கு உடனே நியமன ஒப்புதல் ஆணை வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை செயலா் குமரகுருபரன், தொடக்கல்வி இயக்குநருக்கு அனுப்பிய கடிதம்:

அரசின் ஒப்புதல் பெற்று தனி மேலாண்மையாக செயல்படும் அனைத்து நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் பணியிடம் அனுமதிக்கப்பட்டு, பள்ளி நிா்வாகத்தால் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு, டெட் உள்பட அனைத்து கல்வித் தகுதிகளும் நிறைவு செய்திருந்தால் அந்த நியமனத்தை ஏற்கலாம்.

தமிழக அரசால் 17.9.2019-இல் வெளியிடப்பட்ட அரசாணை 165-ஐ சுட்டிக்காட்டி நியமன ஒப்புதல் கோரும் கருத்துருகளை மாவட்டக் கல்வி அலுவலா்கள் நிராகரிக்கக்கூடாது.

அதேபோல, நியமன ஒப்புதல் கோரும் கோப்புகளில் அடிப்படை விதிகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை சரிபாா்த்து உறுதி செய்து ஆணைகள் வழங்க வேண்டும். நிராகரிக்கும் சூழலில் உரிய விளக்கத்தை தர வேண்டும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com