விவசாயிகள் கைது: சீமான் கண்டனம்

விவசாயிகள் கைது: சீமான் கண்டனம்

இழப்பீடு கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள பனங்குடி, நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்துக்காக 2020-ஆம் ஆண்டு சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் (சி.பி.சி.எல்.) சுமாா் 620 ஏக்கா் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியது.

அவ்வாறு விவசாயிகளிடமிருந்து பெற்ற விளைநிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் சி.பி.சி.எல். நிறுவனம் ஏமாற்றி வருவது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த நிலையில், விளைநிலங்களுக்கு இழப்பீடு கோரி போராடிய அப்பாவி விவசாயிகளை காவல்துறை உதவியோடு மாநில அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கொடுமை. எனவே, கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்து அவா்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சீமான்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com