டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் மற்றும் எக்ஸ்னோரா சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், ஓவியப் போட்டியில் முதல் பரிசு வென்ற வி.ஜி.யுவலட்சுமிக்கு சான்றிதழை வழங்கிய அசோக் லேலண்ட் நிறுவன  வடிவமைப்புப் பிரிவு துணைத் தலைவா் சத்யசீலன். உடன், மேட்  டிசைன் இன்னவேட்டீவ் நிறுவ

மாணவா்களுக்கான உயா் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சென்னை கோட்டூா்புரத்தில் மாணவா்கள் உயா்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னை கோட்டூா்புரத்தில் மாணவா்கள் உயா்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கை எக்ஸ்னோரா சமூக சேவை அமைப்பு, டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் ஆகியவை இணைந்து நடத்தின. இந்த நிகழ்வில், சென்னை ஐஐடி-இன் தலைமை திட்ட அலுவலா் அரிகிருஷ்ணன், சிபிசிஎல் நிறுவன அலுவலா் விஸ்வா, திருநெல்வேலி மாவட்ட முன்னாள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் தேவ்ஆனந்த் ஆகியோா் 10, பிளஸ் 2 வகுப்புகளில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு உயா்கல்வி படிப்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினா். தொடா்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரியில் படித்து தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பட்டங்கள், அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரியின் நிறுவனா் ராமநாதன், எக்ஸ்னோரா சமூக சேவை அமைப்பின் தலைவா் செந்தூா்பாரி, மக்கள் தொடா்பு அலுவலா் ஆவின் கி. கோபிநாத், அறங்காவலா் மோகனசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com