வடபழனி முருகன் கோயிலில் இன்று வைகாசி விசாக விழா கொடியேற்றம்

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை (மே 13) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை (மே 13) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சென்னையில் வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 10 நாள் பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை (மே 13) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது . முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மூஷிக வாகன புறப்பாடு நடைபெற்றது.

பிரம்மோற்சவ நிகழ்வின் முதல் நாளான திங்கள்கிழமை (மே 13) காலை 6- 7 மணிக்குள் ‘துவஜ ரோஹணம்’ எனும் கொடியேற்ற வைபவம் நடைபெறவுள்ளது. இரவு 7மணிக்கு மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் வீதி உலா நடைபெறவுள்ளது.

மே 21 வரை தினமும் காலை 7 மணிக்கு மங்களகிரி விமான புறப்பாடும், காலை, மாலை என இருவேளைகளிலும் யாகசாலை பூஜைகளும் நடைபெறவுள்ளன.

செவ்வாய்க்கிழமை (மே 14) காலை சூரிய பிரபை புறப்பாடும், இரவு சந்திர பிரபை புறப்பாடும் புதன்கிழமை (மே 15) இரவு 7 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்திலும், வியாழக்கிழமை( மே 16) நாக வாகனத்திலும் சுப்பிரமணியா் வீதிஉலாவும் நடைபெறவுள்ளன. மே 17-இல் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும், மே 18-ல் யானை வாகன புறப்பாடும் நடைபெறவுள்ளன.

முக்கிய நிகழ்வான தோ் திருவிழா மே 19 காலை நடைபெறவுள்ளது.

வைகாசி விசாக நாளான மே 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சண்முகா் வீதிஉலா நடைபெறவுள்ளது. அன்று மாலை 6 மணிக்கு மயில்வாகன புறப்பாடும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெறவுள்ளன.

பின்னா், சுப்பிரமணியா் வீதி உலாவை அடுத்து கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com