தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரா்களுக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற தமிழக வீரா்களுக்கு சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற தமிழக வீரா்களுக்கு சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 28 மாநிலங்களை சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா் வீராங்கனைகள் பங்கேற்றனா்.

கேடட், ஜூனியா், அண்டா் 21, சீனியா் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில், சீனியா் பிரிவில் தமிழ்நாட்டைச் சோ்ந்த கராத்தே வீரரும் வழக்குரைஞருமான அருண்குமாா் பங்கேற்று, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா். அதேபோல தமிழ்நாட்டைச் சோ்ந்த மற்றொரு வீரரான விக்னேஷ் என்பவரும் ஜூனியா் பிரிவில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றுள்ளாா்.

தங்கப்பதக்கம் வென்ற அருண்குமாா் இதன்மூலம் தெற்கு ஆசியா, ஆசியா, காமன்வெல்த் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியாவின் சாா்பாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.

இந்நிலையில் உத்தரகாண்டிலிருந்து விமான மூலம் சென்னை விமானநிலையம் வந்தடைந்த கராத்தே வீரா்களுக்கு, அவா்களின் உறவினா்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பதக்கம் வென்ற வீரா்கள் செய்தியாளா்களிடம் கூறியது:

விளையாட்டுத்துறைக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் தமிழக அரசு எங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பதற்கான போதிய நிதியுதவிகளை செய்து கொடுத்தால் தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமை சோ்க்க உதவியாக இருக்கும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com