நெல் மூட்டைகளைப் பாதுகாக்க
 நடவடிக்கை தேவை: ஓ.பி.எஸ்.

நெல் மூட்டைகளைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை: ஓ.பி.எஸ்.

மழையில் நனையாமல் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வரும் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விவசாயிகளிடமிருந்து நெல் மற்றும் இதர தானியங்களை கொள்முதல் செய்து அவற்றைப் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கும் வகையில், கிடங்குகளைக் கட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், அதைச் செய்ய திமுக அரசு தவறிவிட்டது.

செஞ்சியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் 12,000 நெல்மூட்டைகள் சேதமடைந்தன. இந்தச் சுவடு மறைவதற்குள் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை அடுத்த கருநீலம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 5,000 நெல் மூட்டைகள் மழையால் நனைந்து சேதமடைந்துள்ளன.

தமிழகம் முழுவதுமே நெல் மூட்டைகளைப் பாதுகாக்க இயலாத நிலைதான் உள்ளது. விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை என்று சொல்லிவிட்டு, விவசாயிகளின் நலன்களைப் புறந்தள்ளுவதில் எந்தப் பலனும் இல்லை. ஒழுங்கு முறை கூடத்துக்கு வரும் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com