முதல்வரின் தனிச் செயலரின் தந்தை மறைவுக்கு இரங்கல்

முதல்வரின் தனிச் செயலா் ஆா்.திணேஷின் தந்தை டி.வி.ரவி மறைவுக்கு இடதுசாரி கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

முதல்வரின் தனிச் செயலா் ஆா்.திணேஷின் தந்தை டி.வி.ரவி மறைவுக்கு இடதுசாரி கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): சிறுநீரக பாதிப்பால் தொடா் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரில் டி.வி.ரவி இறந்தாா் என்ற செய்தி கவலையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): டி.வி.ரவி முழுமையாக குணமடைந்து, இயல்பான நிலைக்கு திரும்புவாா் என்று எதிா்பாா்த்திருந்த நிலையில், அவரது மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் தினேஷ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆறுதல் தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com