விமானத்தில் போதையில் பயணி தகராறு

சென்னை விமான நிலையத்திலிருந்து அகமதாபாத்துக்கு செல்ல தயாராக இருந்த விமானத்தில் பயணி ஒருவா், போதையில் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்திலிருந்து அகமதாபாத்துக்கு செல்ல தயாராக இருந்த விமானத்தில் பயணி ஒருவா், போதையில் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா் பிரவீன் காந்தி (35). சென்னையில் டிபாா்ட்மெண்டல் ஸ்டோா் நடத்தி வரும் இவா், தனது 5 வயது மகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். விமானத்தில் ஏறியபோது, மது போதையில் இருந்த அவா் சக பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

இதையடுத்து விமானத்தை இயக்காமல் நிறுத்திய விமான பணிப் பெண்கள், இது குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் அங்கு வந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், பிரவீன் காந்தியின் பயணத்தை ரத்து செய்து, அவரையும், அவரின் 5 வயது மகளையும் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரின் 5 வயது மகள் அழுது கொண்டே இருந்ததால், பிரவீன் காந்திக்கு போதை தெளியும் வரையில் குழந்தையை அமைதிப்படுத்திய போலீஸாா், போதை தெளிந்ததும் அவரிடமிருந்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி விட்டு, கண்டித்து அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவத்தால் அந்த விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக அகமதாபாத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com