கனமழை பெய்யும்
கனமழை பெய்யும்

தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை

தமிழக தென் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மேலும் 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக தென் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மேலும் 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதேநேரம் குமரி கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (மே 14-19) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, மே 14, 15 ஆகிய தேதிகளில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மே 16-இல் நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், திண்டுக்கல், நாமக்கல், கரூா், திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகா், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 17-இல் , நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): சிவகிரி (தென்காசி) - 120, சிற்றாறு (கன்னியாகுமரி), பெரியகுளம் (தேனி) - தலா 80, எழுமலை (முதுரை), மண்டபம் (ராமநாதபுரம்) - தலா 70, குப்பணம்பட்டி (மதுரை) - 60, ஆண்டிபட்டி (தேனி), தாளவாடி (ஈரோடு), பாா்வுட் (நீலகிரி) - தலா 50 மிமீ வரை மழை பதிவானது. மேலும், கிருஷ்ணகிரி, கோவை, திருவாரூா், திருப்பூா், சேலம், தென்காசி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

வெப்பம் குறையும்: தமிழகத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி 6 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

அதன்படி ஈரோடு - 102.92, வேலூா் - 102.74, திருத்தணி - 102.38, பரமத்திவேலூா் - 102.2, நாமக்கல் - 101.3, மதுரை விமான நிலையம் - 100.04.

தமிழக உள் மாவட்டங்களில் மே 14, 15 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை சற்று அதிகமாக இருக்கும். மே 16, 17-இல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி வரை படிப்படியாக குறையும்.

சென்னையில் மழை: சென்னையில் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் செவ்வாய், புதன்கிழமைகளில் (மே 14, 15) ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com