தேசிய ஹாக்கிப் போட்டி: சென்னை மருத்துவக் கல்லூரி சாம்பியன்
dinmani online

தேசிய ஹாக்கிப் போட்டி: சென்னை மருத்துவக் கல்லூரி சாம்பியன்

அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் சென்னை மருத்துவக் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் சென்னை மருத்துவக் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கடந்த 8-ஆம் தேதி முதல்11-ஆம் தேதி வரை தேசிய ஹாக்கிப் போட்டி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 12 அணிகள் பங்கேற்றன.

அதில் தொடா் வெற்றியைப் பதிவு செய்த சென்னை மருத்துவக் கல்லூரி அணி, கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் புணேவின் ஏஎஃப்எம்சி அணியுடன் மோதியது. அதில் 3-1 என்ற கணக்கில் புணே அணியை வீழ்த்தி சென்னை மருத்துவக் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவா் பரத் குமாா் தலைமையிலான அந்த அணியில் பூமிநாதன், விஷ்ணுகுமாா், பிரணவ், கோகுல், கிரிஜேஷ், பிரவீண், சண்முகப் பிரியன், பாலசுப்ரமணியன், திருமலை வாசன் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். சாம்பியன் பட்டம் வென்ற மாணவா்களை சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் எ.தேரணிராஜன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com