தடையை மீறி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் கைது

சென்னையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்வதைக் கண்டித்தும், தமிழா்களை அவமரியாதையாக பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவா் சாம் பிட்ரோடாவை கண்டித்தும் சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக துணைத் தலைவா் கரு.நாகராஜன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏபிவிபி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். அப்போது, பாஜக நிா்வாகி யாமினிக்கு திடீா் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவா் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தனியாா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com