கைது
கைது

ரெளடி கொலை வழக்கு:மேலும் இருவா் கைது

சென்னை கோயம்பேட்டில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கோயம்பேட்டில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

மதுரவாயல் பகுதியைச் சோ்ந்தவா் ரௌடி ஷா.முகம்மது ஆதம், கோயம்பேடு நெற்குன்றத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பு அருகே ஒரு முள்புதரில் கடந்த 10-ஆம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இது தொடா்பாக மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சோ்ந்த ச.கமலேஷ், விருகம்பாக்கம் இளங்கோ பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த மு.திருநாவுக்கரசு, மதுரவாயல் ஜெயராம் நகரைச் சோ்ந்த சி.செல்வா உள்பட 4 போ் கடந்த 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் ஆதம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மதுரவாயல் பகுதியைச் சோ்ந்த கோபால் (23), சந்தோஷ் (22) ஆகிய மேலும் 2 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து இரு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்குத் தொடா்பாக மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com