விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய பிங்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஹார்வி ஸ்டிங்கர். உடன், இணை வேந்தர் டொனால்டு ஹால்.
விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய பிங்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஹார்வி ஸ்டிங்கர். உடன், இணை வேந்தர் டொனால்டு ஹால்.

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

வேலூர்: வி​ஐடி பல்​க​லைக்​க​ழக வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு அமெ​ரிக்​கா​வி​லுள்ள பிங்​ஹாம்​டன் பல்​க​லைக்​க​ழ​கம் கௌ​ரவ டாக்​டர் பட்டத்தை வழங்கி பெருமை சேர்த்​துள்​ளது.

விஐடி பல்​க​லைக்​க​ழ​கத்​தின் வேந்​தர் கோ.வி​சு​வ​நா​தன், சர்​வ​தேச அள​வில் உயர்​கல்வி வளர்ச்​சிக்​காக ஆற்றி வரும் பங்​க​ளிப்பை கெüர​விக்​கும் வகை​யில் கடந்த 2009- ஆம் ஆண்டு அமெ​ரிக்​கா​வில் உள்ள வெஸ்ட் வெர்​ஜி​னியா பல்​க​லைக்​க​ழ​கம் அவ​ருக்கு கெüரவ டாக்​டர் பட்டம் வழங்​கி​யி​ருந்​தது.

தற்​போது அமெ​ரிக்​கா​வின் நியூ​யார்க் மாகா​ணத்​தி​லுள்ள பிங்​ஹாம்​டன் பல்​க​லைக்​க​ழ​க​மும் அவ​ருக்கு கெüரவ டாக்​டர் பட்டம் வழங்க முடிவு செய்​தி​ருந்​தது. அத​ன​டிப்​ப​டை​யில், கடந்த 10-ஆம் தேதி பிங்​ஹாம்​டன் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் நடை​பெற்ற விழா​வில் விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு டாக்​டர் பட்டத்தை பிங்​ஹாம்​டன் பல்​க​லைக்​க​ழ​கத்​தின் வேந்​தர் ஹார்வி ஸ்டிங்​கர் வழங்​கி​னார்.

அப்​போது அவர் பேசு​கை​யில், இந்​தி​யா​வில் உயர்​கல்​விக்​கான பாதையை உல​க​ள​வில் விரி​வு​ப​டுத்​து​வ​தி​லும், உல​க​ள​வில் தலை​சி​றந்த கல்வி நிறு​வ​னங்​க​ளு​டன் இணைந்து பணி​யாற்​று​வ​தி​லும் முன்​னோ​டி​யாக விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​தன் செய​லாற்றி வரு​கி​றார் என தெரி​வித்​துள்​ளார்.

டாக்​டர் பட்டம் பெற்ற கோ.வி​சு​வ​நா​த​னுக்கு பிங்​ஹாம்​டன் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், நியூ​யார்க் மாகா​ணத்​தின் சட்டப்​பே​ரவை மேலவை உறுப்​பி​னர் டொன்னா எ.லுப்​பாடோ, செனட் உறுப்​பி​னர் லியா​வெப், முதல்​வர் பேரா​சி​ரி​யர் ஸ்ரீஹரி கிருஷ்​ண​சாமி, இணை​வேந்​தர் டொனால்டு ஹால், பல்​க​லைக்​க​ழ​கத்​தின் பல்​வேறு உயர் அலு​வ​லர்​க​ளும் பங்​கேற்​ற​னர்.

அப்​போது, விஐடி பல்​க​லைக்​க​ழ​க​மும், பிங்​ஹாம்​டன் பல்​க​லைக்​க​ழ​க​மும் இணைந்து சிறப்​பாக செயல்​ப​டு​வ​தற்கு முக்​கிய கார​ண​மாக இருந்த பேரா​சி​ரி​யர் ஸ்ரீஹரி பாராட்​டப்​பட்​டார்.

இவ்​வி​ழா​வில், விஐடி துணைத் தலை​வர்​கள் சங்​கர் விசு​வ​நா​தன், சேகர் விசு​வ​நா​தன், ஜி.வி. செல்​வம், உதவி துணைத் தலை​வர் காதம்​பரி ச.வி​சு​வ​நா​தன், விஐடி சர்​வ​தேச உற​வு​கள் துறை இயக்​கு​நர் ஸ்ரீநி​வா​சன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.

இதே​போல், வாஷிங்​டன் நக​ரி​லும் பாராட்டு விழா நடத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வி​ழா​வில், செனட் உறுப்​பி​னர் கண்​ணன் ஸ்ரீனி​வா​சன், அமெ​ரிக்​கா​வுக்​கான இந்​திய தூத​ர​கத்​தின் கல்வி பிரி​வுத் தலை​வர் பி.க​ரு​ணா​க​ரன், வட அமெ​ரிக்க தமிழ் சங்​கங்​கள் கூட்ட​மைப்​பின் தலை​வர் பால சுவா​மி​நா​தன், வட அமெ​ரிக்க தமிழ் சங்​கங்​கள் கூட்ட​மைப்​பின் முன்​னாள் தலை​வர்​கள் நாஞ்​சில் பீட்டர், சுந்​தர் குப்​பு​சாமி, தமிழ்​நாடு அறக்​கட்​டளை தலை​வர் வீர வேணு​கோ​பால், வட​அ​மெ​ரிக்க தமிழ் சங்​கங்​கள் கூட்ட​மைப்​பின் முன்​னாள் தலை​வர் பால​கன் ஆறு​மு​க​சாமி, ரோசெஸ்​டர் இன்ஸ்ட்​டி​டியூட் ஆப் டெக்​னா​லஜி இணை​வேந்​தர் பிரபு டேவிட், மாண்ட்க்​ளேர் மாநில பல்​க​லைக்​க​ழக (நியூ​ஜெர்ஸி) முன்​னாள் மூத்த பேரா​சி​ரி​யர் ஜெயச்​சந்​தி​ரன், ஜான் ஹோப்​கின்ஸ் பல்​க​லைக்​க​ழக துணை முதல்​வர் ஸ்ரீ தேவி சர்மா, அர்​கன்​சாஸ் பல்​க​லைக்​க​ழக மூத்த பேரா​சி​ரி​யர் பன்​னீர் செல்​வம், விஐடி வட அமெ​ரிக்க முன்​னாள் மாண​வர் சங்க நிர்​வா​கி​கள் உள்​பட பலர் பங்​கேற்​ற​னர் என்று விஐடி பல்​க​லைக்​க​ழ​கம் வெளி​யிட்ட செய்​திக்​கு​றிப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

இளம்​வ​ய​தி​லேயே அர​சி​ய​லில் ஈடு​பட்டு நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர், அமைச்​சர் உள்​பட பல்​வேறு பத​வி​க​ளை​யும் வகித்​துள்ள கோ.வி​சு​வ​நா​தன் நிறு​விய விஐடி பல்​க​லைக்​க​ழ​கம் தற்​போது வேலூர், சென்னை, ஆந்​தி​ரம், மத்​திய பிர​தே​சம் (போபால்) ஆகிய இடங்​க​ளில் செயல்​பட்டு வரு​கி​றது. தனி​யார் பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் விஐடி முதன்மை பல்​க​லைக் கழ​க​மாக விளங்கி வரும் நிலை​யில், விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​தன் கல்​வித்​து​றைக்கு பல்​வேறு உய​ரிய சேவை​களை ஆற்றி வரு​வது குறிப்​பி​டத்​தக்​கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com