நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு

காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீத்தாராமுக்கு நினைவுப் பரிசு வழங்கிய எஸ்ஆர்எம் இணை வேந்தர் பி.சத்தியநாராயணன்.
காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீத்தாராமுக்கு நினைவுப் பரிசு வழங்கிய எஸ்ஆர்எம் இணை வேந்தர் பி.சத்தியநாராயணன்.

தாம்பரம்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றத்தில் பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தலைவர் பேராசிரியர் டி.ஜி. சீத்தாராம் கூறினார்.

காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் "தேசிய அளவில் உயர்கல்வித் துறை எதிர்கொள்ளும் வாய்ப்பு மற்றும் சவால்கள்' எனும் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து பேராசிரியர் டி.ஜி. சீத்தாராம் பேசியது:

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்வி நிறுவனங்களில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 14 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார்.

இந்நிகழ்வில் எஸ்ஆர்எம் இணைவேந்தர் பி.சத்தியநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com