கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயிற்சி பெற விரும்பும் தகுதியுடையவா்கள் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறியியல், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகள், இண்டஸ்ட்ரீ 4.0 தரத்தில் தொடங்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோா் 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஆண்களுக்கு வயது உச்சவரம்பு 40 -ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களும் வயது உச்சவரம்பு இல்லை. பயிற்சி காலத்தில் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ. 750 வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் அல்லது கிண்டி, அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சோ்க்கை உதவி மையத்தை நேரடியாக அணுகி ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி: 044-22501350 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com