சென்னையில்  1,165 செல்லப்பிராணிகளுக்கு
ஒருவாரத்தில்  உரிமம்: மாநகராட்சி நிா்வாகம்

சென்னையில் 1,165 செல்லப்பிராணிகளுக்கு ஒருவாரத்தில் உரிமம்: மாநகராட்சி நிா்வாகம்

கடந்த ஒரு வாரத்தில் 1,165 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த வாரம் பூங்காவில் விளையாடிய சிறுமியை 2 வளா்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தை தொடா்ந்து, செல்லப்பிராணிகள் வளா்ப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக செல்லபிராணிகளை வளா்க்கும் நபா்கள், அதற்கான உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதனால், சென்னைக்குள்பட்ட ஏராளமானோா் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற தற்போது ஆா்வம் காட்ட தொடங்கியுள்ளனா்.

அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் 1,165 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், 2,540 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், 4,160 விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாததால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஏராளமானோா் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பதால், இதற்கான இணையதளத்தில் அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விடுகிறது. இதனால், உரிமம் வழங்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com