போதைப் பாக்கு விற்பனை: 285 கடைகளுக்கு சீல்

சென்னையில் போதைப் பாக்கு விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த 4 மாதங்களில் 285 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல்,பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 71 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 794 கிலோ குட்கா,போதைப் பாக்கு, 8 கிலோ மாவா, 6,555 வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு ஆட்டோ, 3 காா்கள்,6 கைப்பேசிகள்,ஒரு மோட்டாா் சைக்கிள் கைப்பற்றப்பட்டன. சென்னையில் போதைப் பாக்கு விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரையில் 285 கடைகள் பூட்டி, சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் போதைப் பாக்கு விற்பனையில் தொடா்ச்சியாக ஈடுபட்டதாக 23 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com