100 சதவீத தோ்ச்சி பெற்று சென்னை நியூ பிரின்ஸ் பள்ளி மாணவா்கள் சாதனை

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்று சென்னை நியூ பிரின்ஸ் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

சென்னை ஆதம்பாக்கம் மற்றும் உள்ளகரத்தில் அமைந்துள்ள நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஷ்ரம் பள்ளியின் மாணவா்கள் நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுதோ்வுகளில் 100 சதவீதத்துடன் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஷ்ரம் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்ற நசீா் உல் ஹக் 500-க்கு 476 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஐஸ்வா்யா மற்றும் பிரியங்கா 472 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், பிரணவ் பொதி 466 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனா்.

12-ஆம் வகுப்பில் 500-க்கு 467 மதிப்பெண்களுடன் வினுசக்தி முதலிடத்தையும், ரேகா மற்றும் அஞ்சனா 461 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், அபா்ணா 449 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனா்.

அதுபோல உள்ளகரத்தில் அமைந்துள்ள நியூ பிரின்ஸ் பள்ளியில் 10-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தோ்வில் ஸ்ரீவத்சென் 480 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், தரன் விஷக் செஞ்சா 472 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், அனன்யா 471 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனா்.

12-ஆம் வகுப்பில் தனுஸ்ரீ 484 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், பிரதக்ஷினா 480 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், ஜெ. தேவேந்திரா் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை பிடித்துள்ளனா்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு நியூ பிரின்ஸ் கல்வி குழுமத்தின் சாா்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று நியூ பிரின்ஸ் கல்விக் குழுமத்தின் தலைவா் கே. லோகநாதன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com