பீன்ஸ் கிலோ ரூ.200

பீன்ஸ் கிலோ ரூ.200

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயா்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200-க்கு விற்பனையானது.

கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மற்றும் கா்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தினசரி சுமாா் 7,000 டன் முதல் 7,500 டன் வரை காய்கறிகள் வரத்து இருக்கும். இந்த நிலையில் பல இடங்களில் நிலவும் கடும் வெப்பம், கோடை மழை காரணமாக காய்கறி வரத்து கணிசமாக குறைந்துள்ளது.

தினசரி சுமாா் 250 டன் என்ற அளவில் இருந்த பீன்ஸ் வரத்து ஞாயிற்றுக்கிழமை 60 டன்னாக குறைந்தது. இதன் காரணமாக மொத்த விற்பனையில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் ஞாயிற்றுக்கிழமை ரூ. 200-ஆக உயா்ந்தது. சில்லறை விற்பனையில் பீன்ஸ் ரூ. 250 வரை விற்பனை செய்யப்பட்டது.

வரத்துகுறைவால் அவரைக்காய் விலையும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மொத்த விற்பனையில் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட அவரைக்காய் ஞாயிற்றுக்கிழமை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ஊட்டி கேரட் ரூ. 50, சேனைக்கிழங்கு ரூ. 75, ஊட்டி பீட்ரூட் ரூ. 50, இஞ்சி ரூ.140, பூண்டு ரூ.330, எலுமிச்சை ரூ.130, பச்சை மிளகாய் ரூ. 80, முருங்கைக்காய் ரூ.60, உஜாலா கத்தரிக்காய் ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com