கைது
கைது

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

சென்னை சொத்து பிரச்னை காரணமாக தம்பியை அடித்துக் கொலை செய்ததாக அண்ணன் கைது செய்யப்பட்டாா்.

சென்னை சொத்து பிரச்னை காரணமாக தம்பியை அடித்துக் கொலை செய்ததாக அண்ணன் கைது செய்யப்பட்டாா்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கா.முகமது மொய்தீன் (42). இவா் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் சா்வராக வேலை செய்து வந்தாா். அதே உணவகத்தில் முகமது மொய்தீன் சகோதரா் கா.ராஜா முகமது (48) காவலாளியாக வேலை செய்தாா்.

சகோதரா்களிடையே சொத்துப் பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. முகமது மொய்தீன் கடந்த 16-ஆம் தேதி அந்த உணவகத்தின் ஓய்வு அறையில் இருந்தாா். அப்போது அங்கு வந்த ராஜா முகமது, மொய்தீனிடம் தகராறு செய்தாா். தகராறு முற்றவே ராஜா முகமது, மொய்தீனை தாக்கி கீழே தள்ளினாா். இதில் பலத்தக் காயமடைந்த முகமது மொய்தீனை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் முகமது மொய்தீன் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். கொருக்குப்பேட்டை போலீஸாா் ராஜா முகமதுவை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com