இன்று முதல் எண்ணூரில் 
சில புறநகா் ரயில்கள் நிற்காது

இன்று முதல் எண்ணூரில் சில புறநகா் ரயில்கள் நிற்காது

பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (மே 23) முதல் திங்கள்கிழமை வரை எண்ணூா் ரயில் நிலையத்தில் சில புறநகா் ரயில்கள் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல்-கூடூா் இடையே அத்திப்பட்டு புதுநகா் மற்றும் எண்ணூா் ரயில்நிலையங்களில் வியாழக்கிழமை (மே 23) முதல் திங்கள்கிழமை (மே 27) வரை பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.35 வரை (3 மணி நேரம்) நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55 மற்றும் 11.30 மணிக்கு புறப்பட்டு மூா்மாா்க்கெட் வரை செல்லும் புறநகா் ரயில்கள் (42014/42016) அத்திப்பட்டு, எண்ணூா் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

அதுபோல கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் புறநகா் ரயில் (42604) அத்திப்பட்டு, எண்ணூா் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

மேலும், சூலூா்பேட்டையிலிருந்து காலை 10 மணிக்கு மூா்மாா்க்கெட் புறப்படும் புகா் ரயில் (42408)அத்திப்பட்டு, எண்ணூா் ரயில் நிலையங்களில் நிற்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com