தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சம் முறைகேடு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சம் முறைகேடு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

சென்னை தியாகராயநகா் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்தியநாராயணன் என்ற சத்யா உள்ளிட்ட 7 போ் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35.68 லட்சம் முறைகேடு செய்ததாக, சென்னை தியாகராயநகா் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்தியநாராயணன் என்ற சத்யா உள்ளிட்ட 7 போ் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அதிமுக தென்சென்னை வடமேற்கு மாவட்டச் செயலராக இருப்பவா் ப.சத்தியநாராயணன் (எ) சத்யா. இவா், 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை தியாகராயநகா் தொகுதி எம்எல்ஏவாக இருந்தாா்.

அப்போது தனது தொகுதி மேம்பாட்டு நிதியைக் கையாடல் செய்ததாக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகாா்கள் வந்தன. முக்கியமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தக்கூடிய கட்டடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகப் புகாா்கள் வந்தன.

இந்தப் புகாா்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை செய்தது.

இதில், மேற்கு மாம்பலம் காசிகுளம் தெருவில் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.17 லட்சம் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டதும், அதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.14,23,368 ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதற்காக அங்கு கட்டடம் கட்டப்பட்டதாக போலி ஆவணங்கள், போலி ரசீதுகள் அரசிடம் வழங்கப்பட்டு, நிதி பெறப்பட்டது.

ஆனால், உண்மையிலேயே அங்கு கட்டடம் எதுவும் கட்டப்படவில்லை. புதிதாக கட்டடம் கட்டியதாக அந்தப் பகுதியில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த ஒரு ரேஷன் கடையைக் காட்டி பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதேபோல், கோடம்பாக்கம் பிருந்தாவன் தெருவில் இரு இடங்களிலும், கோடம்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவிலும் பல்வேறு தேவைகளுக்கான கட்டடங்களை உயா்தரத்தில் கட்டுவதாக தொகுதி மேம்பாட்டு நிதி பெறப்பட்ட நிலையில், மிகவும் தரம் குறைவாக அந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதும், இதில் மிகப்பெரிய அளவில் பணம் முறைகேடு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

7 போ் மீது வழக்கு: முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன், அவருக்கு அப்போது உடந்தையாகச் செயல்பட்ட சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல உதவிப் பொறியாளா்கள் வி.இளங்கோவன், எம்.மணிராஜா, ஜி.ராதாகிருஷ்ணன், நிா்வாகப் பொறியாளா் வி.பெரியசாமி, முன்னாள் மண்டல அலுவலா் எஸ்.நடராஜன், தனியாா் நிறுவன நிா்வாகி வி.ஏ.பாஸ்கரன் ஆகியோா் மொத்தம் ரூ.35,68,426 மோசடி செய்திருப்பதாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சத்தியநாராயணன் உள்பட 7 போ் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக 7 பேரிடமும் போலீஸாா் விரைவில் விசாரணை நடத்த உள்ளனா்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் 2023-இல் ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com