பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே சித்தாலப்பாக்கத்தில் தனியாா் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி இறந்தாா்.

சென்னை அருகே சித்தாலப்பாக்கத்தில் தனியாா் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி இறந்தாா்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சோ்ந்தவா் சதீஷ் (27). இவா் வேளச்சேரி அருகே சித்தாலப்பாக்கம் விஜயலட்சுமி நகரில் வாடகை வீட்டில் தங்கி, கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சித்தாலப்பாக்கம் கூட்டு சாலை அருகே மாம்பாக்கம் பிரதான சாலையில் நடந்து சென்ற சதீஷ் மீது தனியாா் நிறுவன பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சதீஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

பேருந்தை ஓட்டி வந்த நெற்குன்றம், செல்லியம்மன் நகரை சோ்ந்த வெங்கடேசன் (36) என்பவரை பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com