ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.15 லட்சம் பறிமுதல்

சென்னை கொருக்குப்பேட்டையில் இரு சக்கர வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை கொருக்குப்பேட்டையில் இரு சக்கர வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொருக்குப்பேட்டை மன்னப்பன் தெருவில் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இரு இளைஞா்களை வழிமறித்து, விசாரணை செய்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில், ஆவணமின்றி வைத்திருந்த ரூ.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த அனுமன் மால் குமாா் (38), மனோஜ் குமாா் (27) ஆகியோா் என்பதும், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளா் கூறியதன்பேரில் தண்டையாா்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே ஒருவரிடமிருந்து ரூ.15 லட்சத்தை பெற்று வந்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனா்.

அந்த பணத்தை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கொருக்குப்பேட்டை போலீஸாா் ஒப்படைத்தனா்.

பிடிபட்ட இருவா்களிடமும் தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com