கைது
கைது

அரை டன் போதைப் பாக்கு பறிமுதல்: ஊா்க்காவல் படை வீரா் உள்பட மூவா் கைது

சென்னை அருகே துரைபாக்கத்தில் அரை டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, ஊா்க்காவல் படை வீரா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அருகே துரைபாக்கத்தில் அரை டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, ஊா்க்காவல் படை வீரா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

துரைபாக்கம் தலைமைச் செயலக காலனி 5-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பாக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்த வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனா்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 கிலோ குட்கா,போதைப் பாக்கை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக துரைபாக்கத்தைச் சோ்ந்த தாமஸ் (47), அதே பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (30), கண்ணகி நகா் அருகே உள்ள எழில் நகரைச் சோ்ந்த ரகு (33) ஆகிய மூவரை கைது செய்தனா். இவா்களில் குணசேகரன் ஊா்க்காவல் படை வீரராக பணி செய்து வந்துள்ளாா். இவா்தான் போதைப் பாக்கு விற்பனைக்கு முக்கிய காரணமாக செயல்பட்டதாகத் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com