மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி

பட்டாபிராம் அருகே மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரியை தண்ணீர் பீய்ச்சி அணைத்த தீயணைப்பு வீரர்கள்.
பட்டாபிராம் அருகே மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரியை தண்ணீர் பீய்ச்சி அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

ஆவடி: ஆவடி அருகே செவ்வாய்க்கிழமை மின் கம்பியில் சிக்கி தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லாரியை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

ஆவடி அருகே பட்டாபிராமில் இருந்து தருமபுரிக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை மதியம் புறப்பட்டது. இந்த லாரியை கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் ஓட்டி வந்தார். தண்டுரை, விக்னேஸ்வரன் நகர் பகுதியில் லாரி வந்தபோது, சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பி மீது லாரி சிக்கி தீப்பற்றி எரிந்தது.

இதைப் பார்த்த ஓட்டுநர் சரவணன் லாரியை சாலையில் விட்டு விட்டு இறங்கி ஓடினார். தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து, அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் லாரி முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.

புகாரின்பேரில், பட்டாபிராம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com