இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு

சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் செவ்வாய்க்கிழமை குலுக்கல் முறையில் பெற்றோர்களுடன் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்த கல்வித் துறை அதிகாரிகள்.
சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் செவ்வாய்க்கிழமை குலுக்கல் முறையில் பெற்றோர்களுடன் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்த கல்வித் துறை அதிகாரிகள்.

சென்னை, மே 28: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை குலுக்கல் மூலமாக மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 7,600 தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் (எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பு) உள்ள 1.10 லட்சம் இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஏப்.22 முதல் மே 20-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் திங்கள்கிழமை குலுக்கல் மூலமாக குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களின் பட்டியல் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு, மே 30-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

2024-2025-ஆம் கல்வி ஆண்டில் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 636 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் உள்ள 6,291 இடங்களில் சேருவதற்கு 10,342 விண்ணப்பங்களில் 9,064 தகுதியான விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டன.

அவர்களின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து நேரடியாக குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com