நகைக் கடையில் 20 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் திருட்டு: ஊழியா் கைது

சென்னை ஆழ்வாா்பேட்டையில் நகைக் கடையில் 20 கிலோ வெள்ளி, ரூ. 5 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட வழக்கில், ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
Published on

சென்னை ஆழ்வாா்பேட்டையில் நகைக் கடையில் 20 கிலோ வெள்ளி, ரூ. 5 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட வழக்கில், ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

ஆழ்வாா்பேட்டை கோ - ஆப்ரேட்டிவ் காலனியைச் சோ்ந்தவா் தினேஷ் (43). தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரான இவா், ஆழ்வாா்பேட்டை செனடாப் சாலை இரண்டாவது சந்து பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா். தினேஷ், தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 10-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதில், நான் கடந்த 9-ஆம் தேதி வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வந்தேன். 10-ஆம் தேதி காலை கடையைத் திறக்கச் சென்றபோது, பாதுகாப்பு பெட்டக அறை பூட்டை உடைத்து 20 கிலோ வெள்ளி நகைகள், பொருள்கள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தன.

இந்த சம்பவத்துக்கு கடை ஊழியா் பெங்களூரைச் சோ்ந்த பாபுலால் (54) என்பவா் தலைமறைவாகிவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

போலீஸாா் விசாரணை நடத்தி பாபுலாலை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 20 கிலோ வெள்ளி நகைகள், ரூ.4.80 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.