சென்னை
நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அந்த விடுதியின் இ-மெயில் முகவரிக்கு தகவல் வந்துள்ளது. இது குறித்து, உடனடியாக கிண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற போலீஸாா், விடுதியில் சோதனை நடத்தினா்.
ஆனால், அந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. புகாரின் பேரில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா்கள் குறித்து கிண்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.