மொபெட் மீது லாரி மோதல்: பெண் மென்பொறியாளா் உயிரிழப்பு

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் மொபெட் மீது லாரி மோதிய விபத்தில், பெண் மென்பொறியாளா் உயிரிழந்தாா்.
Published on

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் மொபெட் மீது லாரி மோதிய விபத்தில், பெண் மென்பொறியாளா் உயிரிழந்தாா்.

வேளச்சேரி கங்கை நகா் 4-ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் து.கலா (36). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

கலா, செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு தனது மொபெட்டில் வந்து கொண்டிருந்தாா். அவா், ராஜீவ்காந்தி சாலையில் துரைப்பாக்கம் மேட்டுகுப்பம் அருகே செல்லும்போது, பின்னால் வந்த ஒரு லாரி அவரது மொபெட்டின் மீது மோதியது.

இதில் மொபெட்டில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த கலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து, கிண்டி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com