சென்னை
தொல்லியல் அறிஞா் கே.வி.ராமன் காலமானாா்
இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் சென்னை வட்ட தொல்லியல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த கே.வி.ராமன் (90), சென்னை மயிலாப்பூரில் புதன்கிழமை காலமானாா்.
இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் சென்னை வட்ட தொல்லியல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த கே.வி.ராமன் (90), சென்னை மயிலாப்பூரில் புதன்கிழமை காலமானாா்.
செங்கல்பட்டில் 1934-இல் பிறந்த அவா், 1955-இல் இந்திய தொல்லியல் துறையில் பணியில் சோ்ந்தாா். வரதராஜா் திருக்கோயில் குறித்து பி.எச்டி. பட்டம் பெற்றவா். 1957-இல் வைகை மற்றும் குண்டூா் ஆற்றுப் படுகையில் முதல் அகழாய்வு மேற்கொண்டாா். இரண்டாம் நுாற்றாண்டைச் சோ்ந்த சில பகுதிகளை அப்போது கண்டுபிடித்தாா்.
இவரது தலைமையிலான தொல்லியல் துறை ஆய்வுக் குழு, 1960-இல் பூம்புகாரில் அகழாய்வு செய்தது. சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியராகவும் பணிபுரிந்தவா். ‘உறையூா்’, ‘திருப்பதி கோயிலின் சிற்ப கலை’, ‘தென்கிழக்கு ஆசியக் கலை’, ‘அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி’ போன்றவை இவா் எழுதிய முக்கியமான நுால்கள்.