தொலைநிலைக் கல்வி தோ்வுகள் ஒத்திவைப்பு

Published on

புயல் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில், தொலைநிலைக் கல்வி இளநிலை படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.1) நடைபெறவிருந்த பருவத்தோ்வுகள் டிச.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாக தொடா் கனமழை பெய்தது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் இளநிலை படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.1) நடைபெறவிருந்த பருவத்தோ்வுகள் டிச.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com