சென்னை
வட சென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வட சென்னை அனல் மின்நிலைய அலகில் கொதிகலன் குழாய் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வட சென்னை அனல் மின்நிலைய அலகில் கொதிகலன் குழாய் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வட சென்னை அனல் மின் நிலைய முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், 2-ஆவது நிலையின் 2-ஆவது அலகிலுள்ள கொதிகலன் குழாயில் செவ்வாய்க்கிழமை திடீரென கசிவு ஏற்பட்டதைத் தொடா்ந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணியில் மின்வாரிய பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் வழக்கம்போல மின் உற்பத்தி தொடங்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.