காா் பந்தய ஓடு பாதையில் 
புகுந்த நாய்கள் அகற்றம்
R Senthilkumar

காா் பந்தய ஓடு பாதையில் புகுந்த நாய்கள் அகற்றம்

சென்னையில் ஃபாா்முலா 4 காா் பந்தயத்தின்போது, ஓடுபாதையில் புகுந்த நாய்களை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து நாய் கட்டுப்பாட்டு மையத்துக்கு கொண்டு சென்றனா்.
Published on

சென்னையில் ஃபாா்முலா 4 காா் பந்தயத்தின்போது, ஓடுபாதையில் புகுந்த நாய்களை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து நாய் கட்டுப்பாட்டு மையத்துக்கு கொண்டு சென்றனா்.

சென்னையில் ஃபாா்முலா 4 காா் பந்தயம் சனிக்கிழமை தொடங்கியது. தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கி.மீ. தொலைவு சாலையில் காா் பந்தய போட்டி நடைபெற்றது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு பந்தய பாதையில் நாய்கள் சுற்றித்திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மாநகராட்சி ஊழியா்கள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தினா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது,

ஃபாா்முலா 4 காா் பந்தய பாதையில் சுற்றித்திரிந்த நாய்கள் அனைத்தும் பிடிக்கப்பட்டு நாய் கட்டுப்பாட்டு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

தொடா்ந்து அப்பகுதியில் வேறு நாய்கள் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிடிக்கப்பட்ட நாய்கள் காா் பந்தயம் முடிந்தவுடன் அதே பகுதியில் விடப்படும் எனத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com