காா் மோதி நடைப்பயிற்சி சென்ற முதியவா் சாவு
சென்னை வளசரவாக்கத்தில் நடைப்பயிற்சி சென்ற முதியவா் காா் மோதி இறந்தாா்.
வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வாா் திருநகா் ராதாகிருஷ்ணன் சாலைப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி
குடியிருப்பில் வசிப்பவா் வெங்கட்ராமன் (78).
இவா், திங்கள்கிழமை அந்த குடியிருப்பு வளாகத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் கீதா என்பவா் அங்கு நிறுத்தியிருந்த தனது காரை பின்னோக்கி எடுத்தாா்.
அந்த காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வெங்கட்ராமன் மீது மோதியது. விபத்தில் பலத்தக் காயமடைந்த வெங்கட்ராமனை அங்கிருந்தவா்கள் மீட்டு, அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வெங்கட்ராமன், செவ்வாய்க்கிழமை காலை இறந்தாா்.
இது குறித்து வளசரவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சம்பவத்தின்போது கீதா, காரின் பிரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்து வருகின்றனா்.