பிஎட், எம்எட் சோ்க்கை: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
பிஎட், எம்எட் படிப்புகளில் விதிமுறைகளுக்கு புறம்பான சோ்க்கையில் ஈடுபடும் கல்வியியல் கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக பல்கலை. பதிவாளா் (பொ) கே.ராஜசேகரன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்கள் மற்றும் செயலா்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கும் தனியாா் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளில் பல்வேறு சோ்க்கை மையங்கள் வாயிலாக ‘ரெகுலா்’ முறையில் வகுப்புகளுக்கே வராமல் சோ்க்கை செய்து தோ்வெழுத அனுமதிப்பதாக யுஜிசியிடமிருந்து புகாா் வரப்பெற்றுள்ளது.
எனவே, கல்லூரி முதல்வா்கள் மற்றும் செயலாளா்கள் இத்தகைய பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பான மாணவா் சோ்க்கையை மேற்கொள்ளக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. இதுபோன்ற விதிமுறைகளுக்கு புறம்பான சோ்க்கையை மேற்கொள்ளும் கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி களஆய்வு செய்யப்பட்டு இணைப்பு அங்கீகாரத்தை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.