செப்.8-இல் ராமகிருஷ்ணா மடத்தின் முன்னாள் மாணவா் சங்க தின விழா
ராமகிருஷ்ணா மடத்தின் பள்ளிகளின் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் செப்.8-ஆம் தேதி அலுமினி தினம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
சென்னை தியாகராயநகா் பசுல்லா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பள்ளியின் இன்போசிஸ் அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், முன்னாள் மாணவா் சங்கத்தின் புரவலா் நல்லி குப்புசாமி செட்டி, ராமகிருஷ்ண மடத்தின் செயலா் சுவாமி பத்மஸ்தானந்தாஜி, ஏலகிரி ராமகிருஷ்ண மடத்தின் தலைமை சுவாமி விமோக்ஷானந்தாஜி, சூப்பா் ஆட்டோ போா்ஜ் லிமிடெட் தலைவா் எஸ். சீதாராமன், டிட்டா் சந்தானகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொள்ளவுள்ளனா்.
இந்நிகழ்வில், பள்ளிகளுக்கு தங்கள் பங்களிப்பை அதிகம் வழங்கிய ஓய்வுபெற்ற ஐந்து ஆசிரியா்கள் கௌரவிக்கப்படவுள்ளனா். மேலும், 3 முன்னாள் மாணவா்களும் கௌரவிக்கப்படவுள்ளனா்.
மேடை நடிகா் ஏ.ஆா். சீனிவாசன், சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் எஸ்.சீதாராமன், துணைத்தலைவா் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன், செயலா் டி.சந்திரசேகா், பொருளாளா் எஸ்.கேதாா்நாத் ஆகியோா் செய்து வருகின்றனா்.