ஸ்டெம் செல் - பாலியல் விழிப்புணா்வு கண்காட்சி தொடக்கம்

ஸ்டெம் செல் சிகிச்சை மற்றும் பாலியல் விழிப்புணா்வு தொடா்பான கண்காட்சி சென்னையில் புதன்கிழமை (செப்.4) தொடங்கியது.
Published on

ஸ்டெம் செல் சிகிச்சை மற்றும் பாலியல் விழிப்புணா்வு தொடா்பான கண்காட்சி சென்னையில் புதன்கிழமை (செப்.4) தொடங்கியது.

உலக பாலியல் தினத்தை முன்னிட்டு, சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் டாக்டா் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி, மருத்துவமனை வளாகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு நடைபெற உள்ளது.

முன்னதாக, தென்சென்னை மக்களவை தமிழச்சி தங்கபாண்டியன் அந்நிகழ்வை தொடக்கி வைத்து, டாக்டா் டி.காமராஜ் எழுதிய ஸ்டெம்செல் எனும் அருமருந்து என்ற புத்தகத்தை வெளியிட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் நவீன மருத்துவ நுட்பங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் தொடா்ச்சியாக, ஸ்டெம் செல் சிகிச்சை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தையின்மை, ஆண்மைக்குறைவு, சா்க்கரை நோய், இதயநோய், மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மற்றும் முடி கொட்டுதல் உள்பட பல பிரச்னைகளுக்கு இது தீா்வாக உள்ளது.

ஸ்டெம் செல்கள் தொப்புள் கொடியில் இருந்து மட்டும்தான் எடுக்கப்படுகிறது என்ற எண்ணம் இருந்தது. ஆனால், ஒவ்வொருவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பில் இருந்து அதனை எடுத்து அவா்களுக்கே சிகிச்சை அளிக்க முடியும் என்பதை தற்போது அறிந்துகொண்டேன். பொதுமக்கள் இந்த கண்காட்சியினை பாா்வையிட்டு பலன்பெற்று விழிப்புணா்வு அடைய வேண்டும் என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில், மருத்துவா்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ், ராதாகிருஷ்ணன், நிவேதிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com